
ஜப்பான் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வசதியாக அலுவலக நேரத்தை அந்நாட்டின் முன்னணி வங்கி குறைத்துள்ளது.ஜப்பான் மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்ஸ்.
2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களின் சராசரி குழந்தை பிறப்பு 1 சதவீதமாக இருந்தது.
அதாவது, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு குழந்தை மட்டுமே உள்ளது.
இதனால், வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையிலும் சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிக குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு மக்களை ஜப்பான் அரசு வலியுறுத்தி வருகிறது.அதற்கு உதவும் வகையில், மிட்சுபிஷி யுஎப்ஜே வங்கியின் பெண் ஊழியர்களின் வேலை முடியும் நேரத்தை இரவு 7 மணியில் இருந்து மாலை 5.10 மணியாக குறைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
தம்பதிகள் ரொமான்ஸ் செய்ய மாலை நேரம் சிறந்தது. நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பில் பொறுப்புள்ள நிறுவனமாக வங்கி செயல்பட திட்டமிட்டது. எனவே, பெண் ஊழியர்கள் வேலை நேரம் மாலை 5.10 வரை என மாற்றப்படுகிறது என்றார். முன்னணி வங்கியின் இந்த அதிரடி சலுகையால், தம்பதிகளுக்கு ரொமான்ஸ் டிப்ஸ் அளிப்பது, ரிசார்ட்டில் தங்கும் வசதி போன்ற மற்ற Ôஊக்குவிப்புÕ சலுகைகளை அளிக்க மற்ற நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.ம்ம்... அதெல்லாம் ஜப்பானுக்கு சரி, நம்மூரில் வேலை நேரத்தை டோட்டல் நைட் ஷிப்டாக மாற்ற வேண்டியதுதான் இல்லையா?

0 comments:
Post a Comment