
ஆண் குழந்தை மோகத்தில் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது நம் நாட்டு பெண்களின் வழக்கம். ஆனால், ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுக்கும் வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக பிரிட்டன் தாய் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் சாரா பாஸ். இவரது கணவர் ஸ்டீபன் ஸ்மித். இந்த தம்பதிக்கு கடந்த 1986ல் குழந்தை பிறந்தது. ஒரு குழந்தையே போதும் என நிறுத்திக் கொண்டனர். எனினும், 10 ஆண்டுகள் கழித்து தனது முடிவை மாற்றிக் கொண்டு இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் சாரா.
அதிலிருந்து ஆண்டுக்கொரு குழந்தை வீதம் இதுவரை 13 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். 14வது குழந்தை சாராவின் வயிற்றில் வளர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை குழந்தைகள் இருந்தும் சாராவின் ஆசை தீரவில்லை. ஆம், இரட்டை குழந்தை பெறுவதுதான் அவரது ஆசை. இந்த கனவு நிறைவேறும் வரை ஓயப்போவதில்லை என அவர் கூறுகிறார்.இதுகுறித்து சாரா கூறுகையில், உலகிலேயே குழந்தைச் செல்வம் தான் மிகவும் சிறந்தது. குழந்தைகள் என்றால் எனக்கு உயிர். அதனால் பிரசவம் பற்றிய பயமே எனக்கு இப்போது காணாமல் போய்விட்டது. என்னுடைய குழந்தைகள் எல்லாம் திறமையானவர்களாக உள்ளனர்.
ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. அது நி¬வேறும் வரை ஓயப்போவதில்லை என்றார்.இவரது முதல் பிள்ளையின் பெயர் பாட்ரிக். வயது 23. கடைசி குழந்தையின் வயது 9 மாதம். இதில் பாட்ரிக்கைத் தவிர மற்ற குழந்தைகளுடன் மூன்று படுக்கையறை குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர் சாரா தம்பதி.

0 comments:
Post a Comment