
உடுமலை, : திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ் வரர் கோயில் அருகே பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்துவருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களின் மகள் செல்வியை (33) பல்லடத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு 8 வயதில் கமலி என்ற மகள் உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வியை குமார் விவாகரத்து செய்தார். செல்வி, மகள் கமலியோடு பெற்றோருடன் வசித்து வந்தார். நடராஜுக்கு பஞ்சு மிட்டாய்க்கான மூலப்பொருட்களை காரத்தொழுவை சேர்ந்த கிருஷ்ணன் கொடுத்து வந்தார்.
அவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. காரத்தொழுவு சென்று கிருஷ்ணனுடன் செல்வி குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு ஒரு வயதில் சீனிவாசன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காரத்தொழுவுக்கு சென்றிருந்த பாப்பாத்தி நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அவருடன் செல்வி, கமலி, சீனிவாசன் ஆகியோரும் வந்தனர். நேற்று காலை பார்த்தபோது அங்கு மனைவி, மகள், குழந்தைகள் ஆகிய 4 பேரும் இறந்து கிடந்தனர். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் மகளும் தற்கொலை செய்தது தெரிந்தது.

0 comments:
Post a Comment