
மூன்று வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டிவனம் காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் பவானி (3), அங்குள்ள நர்சரி பள்ளியில் படித்து வந்தாள். நேற்று மாலை விளையாடச் சென்ற பவானி நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பதற்றமடைத்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். இன்று காலையும் தேடுதல் பணியை தொடங்கிய ராமச்சந்திரன், காவேரிபாக்கம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள முட்புதரில் பவானி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடல் முழுவதும் ரத்தக்காயம் இருந்தது. சிறுமியை யாரோ மர்ம ஆசாமி கடத்திவந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. குழந்தையின் உடலைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த நகராட்சி பள்ளி, இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் புகலிடமாக உள்ளது என்றும், அங்கு விபசாரம் கொடிகட்டிப் பறப்பதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விபசார அழகியை தேடிவந்த ஆசாமி, விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று இந்தக் கொடூரத்தை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment