
அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அன்பு (30). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கார் நிறுவன சூபர்வைசர்.நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அத்திப்பட்டு& வானகரம் ரோட்டில் நடந்து வந்தபோது, ஒரு கும்பல் அன்புவை வழிமறித்து தாக்கி, பாக்கெட்டில் இருந்த 5 ஆயிரம் ரூபாயை பறித்தது. போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், அன்புவை தாக்கி வழிப்பறி செய்தது அத்திப்பட்டு சின்ன காலனியைச் சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் மணி (51), அவரது நண்பர்கள் ரமேஷ், ஜெகன், ஷோபன், முனுசாமி, பிரவீன், குமார் என தெரிந்தது. இதையடுத்து, மணி உட்பட 7 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments:
Post a Comment