
கேரள மாநிலம் பத்தனம் திட்டை அருகே உள்ள பொன்குன்னம் பகுதியைச் சேர்ந¢தவர் பினு(38). இவர் பத்தனம்திட்டையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடையில் இருந்து தங்ககட்டிகளை நகைப்பட்டறைக்கு கொண்டு செல்வது மற்றும் பட்டறையில் செய்யப்பட்ட நகைகளை கடைக்கு எடுத்துவரும் வேலையை பினு செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன் 1 கிலோ தங்கத்தை நகைகள் செய்வதற்காக பினுவிடம் கொடுத்து விட்டதாகவும் ஆனால் அதற்கான நகைகளை அவர் திருப்பி கொண்டு வரவில்லை என நகைக்கடை உரிமையாளர் பத்தனம்திட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பினுவை கைது செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது, நகைகளை அங்குள்ள சில கடைகளில் விற்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் பினுவை அவர் நகையை விற்றதாக கூறப்பட்ட ஒரு கடைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு திடீரென கடையில் இருந்த நகைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு கலந்த தண்ணீரை எடுத்து பினு குடித்தார். போலீசார் உடனடியாக பினுவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் கண் முன்னாலேயே ஒரு விசாரணை கைதி சயனைடு தண்ணீர் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பி.கு --- மேலே உள்ள படத்திற்கும் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.......

0 comments:
Post a Comment