Wednesday, November 18, 2009

கோயில் பூட்டு உடைத்து அம்மன் தாலி திருட்டு





பெரம்பூர், : கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை சின்னாண்டி மடத்தில் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி ஜம்புநாதன் நடையை சாத்திவிட்டு சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, மூக்குத்தி ஆகியவை திருடு போயிருந்தது. கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடுகிறார். கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமிக்கே இந்த நிலைமையா?

0 comments:

Post a Comment