Sunday, August 23, 2009

இதிகாசங்களும் ஆபாசமும்

இராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக்கொண்டால் பாரதம் தான் முந்திய நூலாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பாரதத்திற்கும் முந்திய நூல் தான் கந்தபுராணம்! கந்தபுராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை அதிகப்படுத்தியும் மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை சற்று அதிகமாக சேர்த்தும் எழுதப்பட்டதுதான் பாரதம்.

கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிகமிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் பொய்களும் புளுகுகளும் அதில் தான் அதிகமாக உள்ளது. அதில்தான் வைக்கோலில் இருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும் நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தைகள் தோன்றியதாகவும் பகிரங்கப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன .

கடவுள் பெயரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல எதைஎதையோ புளுகி வைத்து விட்டார்கள். பாரதமோ இன்னும் மோசம். ஒருத்திக்கு ஐந்து புருஷர் இருந்ததாக எழுதி விட்டு அவளையே பதிவிரதையாகவும் கற்பித்து விட்டார்கள். அந்த புருஷர்களும் / பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ எந்த எந்த விதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதைகளில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலனவற்றிக்கு தகப்பன்மாரைக்கண்டரிவதே கஷ்டமாகவே இருந்தது.

ஆரிய நூல்களில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கடவுள் தன்மையில் உள்ள ஆபாச கோட்டிற்கு அளவு சொல்லவேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப்போன்ற விபச்சாரக்காரனை - வஞ்சகனை கீழ்க்கண்ட தன்மையை ஆரியர்கள் தவிர்ந்த யாரும் கடவுளாக நீதியாக சித்தரிக்கமாட்டார்கள். அவன் ஒரு விபச்சாரியை அல்ல, இலட்சக்கணக்கான பெண்களைக் கெடுத்து விபச்சாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய் காதலனாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். பிறந்தது முதல் கொண்டு சாகும் வரை அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுங்காக நடந்து கொண்டிருப்பதாக யாராலும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகலாக்கப்படடிருக்கின்றன.

இராமனை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய தசரதனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பொண்டாட்டியை இழந்ததற்கு கூறப்படும் காரணமோ படுமோசம்.
அதாவது மகாவிஷ்ணு எந்தப் பெண்மீதோ மோகம் கொண்டாராம். மோகத்தை திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம். எனவே மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தருவாயை பார்த்துக்கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடைய உடலில் தான் புகுந்துகொண்டு அப்பெண்ணை அடைந்து கூடி இன்புற்றுக்கொண்டிருந்தானாம். அந்தப்பெண், எப்படியோ புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்தவுடனே உண்மையை கேட்டுணர்ந்து , மகாவிஷ்ணு மறு ஜென்மமெடுத்து தன் மனைவியை பிறன் கையில் விட்டு தன்னைப்போல கற்புக்கெட்டவளாக வேண்டும் என்று சாபம் கொடுத்தாளாம். அதையோட்டிதான் இராமன் அவதாரம் ஏற்பட்டு சீதையை இராவணனுக்கு பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டதாம் . என்ன ஒரு தெய்வத்தன்மை!
பிறன் மனைவி மீது மோகிப்பதும் வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்படி தெய்வத்தன்மைகள். ஆண்கள் இப்படியென்றால் ஆரியப் பதிவிரதைகளைப்பற்றி பேசினால் நம் பெண்கள் சகிக்கமாட்டார்கள்.


இராமயணந்தான் ஆபாசமென்றால் பாரதத்தின் யோக்கியைதான் என்ன? மகாபாரதத்தை ஐந்தாவது வேதம்என்று கூறுகிறார்களே! அந்த கதைகளில் வருகின்ற பெண்மணிகளில் யாரையாவது பத்தினி என்று காட்டமுடியுமா? துரோபதையை எடுத்துக்கொண்டால் அந்த பெண் ஒரு " ". ஐந்து கணவன்மார்கள் இருந்தும் ஆறாவதாக கர்ணனையும் காதலித்தாள் என்று அவள் வாயால் சொன்னதாகக் காணப்படுவதுடன் உலகிலேயே பத்தினி இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டாள்.

பாண்டவர்களின் தாய்மார்களும் இப்படித்தான். பாண்டவர்களில் ஒருவன் வாயுவிற்கும், ஒருவன் எமதர்மனுக்கும் மற்றவன் இந்திரனுக்கும், மற்றும் ஒருவன் வருணனுக்கும் மற்றவன் அக்கினிக்கு என்று கதை போகும். பாண்டு மன்னன் வேறு இவளை அக்கினி சாட்சியாக கல்யாணம் செய்தானாம். இவர்கள் தாயின் கதை இப்படி. இவர்கள் பாட்டி மார்களின் கதை அதை விட மோசம். அந்த கதையை கேட்டால் விபச்சாரிக்கே வெட்கம் வந்து விடும்.

இராமாயணத்தில் ஒழுக்க ஈனம் , புத்திர துரோகம் , சகோதர துரோகம் , பெண்ணடிமைத்தனம், மனிதத்தன்மைக்கு துரோகம் செய்தல் தவிர வேறு ஒன்றையும் காண இயலாது.
மொத்தத்தில் பெரியார் சொன்னது போல மனித ஒழுக்கத்தை சீரழிக்கும் மிகப்பெரிய சாதனமே இதிகாசங்கள்.

இந்த பதிவு வரவேற்பை பெறும்பட்சத்தில் ஆபாசம் தவிர்ந்த ஏனைய இதிகாச சீரழிவுகளை தருகின்றேன்.
மீண்டும் சந்திப்போம்.
மறக்காமல் ஓட்டை போடவும்.