Friday, May 15, 2009

தமிழர்கள் கார் வாங்கும் விதம்

உலகில் கூடுதலாக கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று தங்கள் பிரதிநிதி ஒருவரை உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் அனுப்பி கார் வாங்கும் போது என்னென்ன பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கொள்வனவு செய்கிறார்கள் என்பதை பார்த்து வரச்சொன்னது.

முதலில் அந்த பிரதிநிதி ஜெர்மனிக்கு சென்று அங்குள்ள ஒருவரிடம் எவ்வாறு நீங்கள் காரை தெரிவுசெய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு ஜெர்மனியன் "காரின் முன்பகுதி போனட்டை திறந்து என்ஜின் நன்றாக இருந்தால் அதுபோதும் " என்றான்.

அடுத்ததாக ஒரு பிரிட்டிஷ் காரனிடம் அதே கேள்வியை கேட்க அவன் " முன் சீட், பின் சீட் குஷன் போட்டு சொகுசா இருந்தா போதும்" என்றான்.

அடுத்ததா அமெரிக்கன் " கார் நல்ல நீளமாகவும் அகலமாகவும் பார்க்க ஸ்டைல் ஆகவும் இருக்க வேண்டும்" என்றான்.

கடைசியா நம்ம தமிழன் கிட்ட கேட்டான். அதற்கு நம்ம தமிழன் " கார் எத்தனையாவது ஓனர் ? ரீ பெயிண்டா ? ஒரிஜினல் பெயிண்டா ? பிஸ்டன் நம்பர் என்ன ? டயர் ஒரிஜினலா? எத்தன கிலோமீட்டர் ஓடினது? எங்கயாவது விபத்துல சிக்கிச்சா? மூன்று இலக்கம் உள்ள காரா? கார் நம்பரின் கூட்டு தொகை என்ன வருகிறது? இந்த காரை ஏன் விற்கிறார்கள்? இவைகள் எல்லாம் சரியா இருந்தும் கார் நம்பரின் கூட்டுத்தொகை எட்டு வந்தால் நாங்கள் வாங்கமாட்டோம் " என்றானாம் தமிழன்.

தமிழனின் பேச்சை கேட்ட பிரதிநிதிக்கு தலை சுற்றியது! இன்னும் நிற்கவில்லை.
தமிழன் தமிழந்தாண்டா!

மீண்டும் சந்திப்போம்.

Thursday, May 14, 2009

தமிழ்

தமிழுக்கு அமுதென்று பேர்

கோழி கறியின் சுவை

பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கோழிகறி சாப்பிடுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். கோழி கறிக்குப் பிரபலமாயிருந்தது அந்த ஹோட்டல் .

பல நாடுகளில் வேலை செய்த ஒருவர் இந்த ஹோட்டலில் சாபிட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அவர் உணவு பரிமாருகிறவரைப்பார்த்து "இது கோழிக்கறியல்ல . குதிரைக்கறியின் ருசி வருகிறதே! உண்மையை சொல் . இது குதிரைக்கறி தானே " என்று கேட்டார். இல்லை சேர் கோழிகறி தான் என்றான் அவன்.

"கோழி கறிக்கும் குதிரைக்கறிக்கும் நன்கு வித்தியாசம் தெரியும் எனக்கு" என்று சிரித்தபடி கேட்டார் வந்தவர்!

உணவு பரிமாறுபவர் மெதுவாக அவரிடம் கோழிகறியின் ருசிக்காக கொஞ்சம் குதிரைக்கறி சேர்ப்பது உண்டு என்றான்.

கொஞ்சம் என்றால் எந்த அளவில் சேர்ப்பிர்கள் என்று வந்தவர் கேட்டார். மறுபடியும் தயக்கத்துடன் அவன் "சம அளவு குதிரை கறியும் சம அளவு கோழிகறியும் சேர்த்து சமைப்பார்கள் " என்றான்.

அதெப்படி சம அளவு என்றால் என்ன மாதிரி ? பொய் சொல்லாமல் சொல்லு என்று வந்தவர் திரும்பக்கேட்டார்.

அவன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மெதுவாக சொன்னான் "ஒரு கோழிக்கு ஒரு குதிரை வீதம் சமைப்போம் " என்று சொல்லி முடித்தான்.
வந்தவருக்கு தலை சுற்றியது.
நான் இதை எழுதி முடிக்கும் வரை நிற்கவில்லை .


மீண்டும் சந்திப்போம்.

தமிழன் உருப்படாததுகான காரணம்

ஒரு அமெரிக்கன் தனிமையில் இருந்தால் காதல் சிந்தனையில் மூழ்கி இருப்பான். இரண்டு அமெரிகர்கள் சேர்ந்தால் ஒரு கட்சியை ஆரம்பிப்பார்கள். மூன்று அமெரிக்கர்கள் சேர்ந்தால் ஒரு மந்திரி சபையை கலைத்து விடுவார்கள்...


ஒரு இத்தாலியன் தனிமையில் இருந்தால் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருபான். இரண்டு பேர் சேர்ந்தால் படை திரட்டுவார்கள். மூன்று பேர் சேர்ந்தால் அயல் நாட்டின் மீது படை எடுப்பார்கள்.


ஒரு தமிழன் தனிமையில் இருந்தால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பான். இருவர் சேர்ந்தால் மூன்றாவது மனிதனுடைய குறை நிறைகளை திட்டி தீர்ப்பார்கள். பத்து பேருக்கு மேல் இருந்தால் சங்கம் அமைப்பார்கள். இருபது பேருக்கு மேல் சேர்ந்து விட்டால் தலைவரை எப்படி பதவியில் இருந்து இறக்கலாம் என்று திட்டம் போடுவார்கள்.


இப்போது புரிகிறதா தமிழன் உருபடாததட்கான காரணம்.
மீண்டும் சந்திப்போம்.
தமிழன் என்று சொல்லடா!!! தலை நிமிர்ந்து நில்லடா!