Wednesday, June 3, 2009

அம்மா பகவானின் அருள் நிஜமானதா

நான் யார் மனதையும் புண்படுத்தும் வண்ணமாகவோ சாமூகவியல் பார்வைகளை கொச்சை படுத்தும் வண்ணமாகவோ இவ்விடயத்தை ஆராயவில்லை. மாறாக சில அடிப்படையான எண்ணக்கருத்துகளை வைத்தே ஆராய்கிறேன்.

உயிரோடிருப்பவர்களை கடவுளாக கருத முடியுமா என்பது பலரது கேள்வி. இதற்கு பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக விடை தேட முட்படினும் உயிரோடிருக்கிறவர்களை கடவுளாக கருதமுடியாதென்பதும் அவர்களது நடத்தைகளை முன்மாதிரியாக கொள்ள முடியுமென்பதே பொதுவான நியதியாகும். என்னைப்பொறுத்த வரையில் சாய்பாபா, அம்மாபகவான் மற்றும் சில குருஜிகளாக கருதப்படுபவர்கள் எல்லோரும் ஒரேபார்வையில் நோக்கப்படவேண்டியவர்களே.

சில காலங்களுக்கு முன்பு ஜெயேந்திர ஸ்வாமிகள் எனும் ஒருவரைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! அவரின் பின்னால் அலைந்த கூட்டம் ஏராளம். கடைசியில் நடந்தது என்ன? சாமி சிறையில் .... பக்தன் தெருவில்....!!!!!!

உயிரோடிருப்பவர்கள் கொடுக்கும் வாரம் எப்படிப்பட்டதென்பதற்கு கடந்த வாரம் நூலகத்தில் படித்த ஒரு விடயத்தை கூறுகிறேன். பொதுவாக இந்த பகவான்களிடம் செல்லும் மக்கள் புது செருப்பை அணிந்து செல்வார்களாம். உள்ளே செல்லும் பொது அதை கழற்றி விட்டுதான் செல்ல வேண்டும். உள்ளே தியானத்தில் இருக்கும் பொது அவர்கள் தியானத்தை விடுத்து விட்டு செருப்பை பற்றித்தான் யோசிப்பார்களாம். எதிர்காலத்தில் தாங்கள் தியானத்தில் கேட்டது நடந்து விட்டால் பகவானைபற்றி புகழ் பாடுவார்கள். நடக்கவிட்டால் செருப்பை பற்றி நினைத்ததால் தான் நடக்கவில்லை என்று நினைத்து கொள்வார்களாம்.

மேலும் முற்காலத்தில் சாமியாராக வாழ்ந்தவர்கள் மிகவும் எளிமையாகவும், மக்களோடு மக்களாகவும் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றோ சொகுசாகவும் தங்க கோவில்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மாயையான தோற்றத்தையே காட்டுகிறது.

எவ்வாறிருப்பினும் இவை மனித சிந்தனைகளுக்கு அப்பாற்ப்பட்ட விடயமாகையால் நிஜம் எது நிழல் எது என்று இலகுவில் ஊகித்தறிவது கடினம். இது அவரவர் கருத்துகோள்களிலும் கட்டமைப்புகளிலும் தங்கியுள்ளதென்பதே மறுக்கவோ மறக்கவோ முடியாத உண்மை.

யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மீண்டும் சந்திப்போம்.

Monday, June 1, 2009

என்ன கொடுமை இது?

Photobucket

Photobucket


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket